Monday 16 October 2017

நம் மொழியின் தொன்மையும் மேன்மையும்!

R. Aishwarya

தயவு செய்து இக்கட்டுரையை படித்து நம் வரலாற்றையும் நம் மொழியின் தொன்மையையும் மேன்மையையும் அறிந்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

Name and Place of the Library:  Anna Centenary Library, Kotturpuram, Chennai

Description of the Library: Anna Centenary Library is Asia’s largest library. It is located in the state of Tamil Nadu, in Chennai, the capital of Tamil Nadu. It was constructed at an estimate of Rs. 175 crores. It was inaugurated by Dr. Karunanidhi, our former Chief Minister, in honour of his mentor and our former Chief Minister Shri C. N. Annadurai.

This library is fully air-conditioned with 5,50,000 books. We are so proud to have this library in our state. This library was considered as “One of the milestones in Karunanidhi’s political life. It was very useful for the students who are taking all kinds of competitive exams. There are numerous articles and magazines on a variety of subjects for exams like IAS, IPS, IFS and TNPSC exams. A few of the magazines are: Competitive Success Review, Yojana, Thittam and Thamizharasu.

Librarian's  Name:   Ms. Vanaja, 2nd Floor, Tamil section.

Various Sections of the Library:

1.         Braille section -This section consists about 1500 braille printed books.
2.         Own-book reading section.
3.         Children section.
4.         Periodicals section.
5.         Tamil books section.
6.         English book section.

Tamil books section is in second floor of the library. This section contains about 1 lakh books in various departments.English book section contains about 4,50,000 books in 3rd to 7th floor. Braille books are in ‘A’ wing of this library. This library was daily visited by about 2,700 persons.

Third floor: General, Computer Science, Library and Information Science, Philosophy, Psychology, Ethics, Religion, Socialogy, Statistics, Political Science, etc.

Fourth floor: Economics, Law, Public Administration, Education, Languages and Linguistics, Literature, Folklore, etc.

Fifth floor: General Science, Mathematics, Astronomy, Physics, Chemistry, Earth Science, Geology, Fossils And Pre-Historic Life, Life Science (Biology), Plants(Botany), Animals (Zoology), Applied Science-Basic, Medicine & Health, etc.

Sixth floor: Engineering, Agriculture, Home And Family Management, Veterinary Science, Management & Public Relation, Acounting, Fine Arts, Architecture, Photo Graphy & Computer, Arts, Music, Sports, Games & Entertainment, etc.

Seventh floor: History, Geography, Travelogue, Biography & Government Oriental Manuscript Library.

நான் இந்த நூலகத்திற்கு சென்றதையே மிகவும் பெருமையாக கருதுகிறேன்நீங்கள் வகுப்பில், 'காலையில் சென்று மாலை வரை படியுங்கள் அங்கு எல்லா வசதிகளும் உள்ளது,' என்று சொன்னீர்கள்அதை வைத்து நான் என் மனதிற்கு எட்டிய கற்பனைகளுடன் சென்றேன்.

ஆனால் அங்கு சென்று பார்த்தவுடன் முற்றிலும் மாறுபட்டு காட்சியளித்துபிரம்மாண்ட மான கட்டிடம்! உள்ளே குளிரூட்டப்பட்ட தளங்கள்! எல்லாவற்றிற்க்கும் மேலாக - அனைத்து வகையான லட்சக்கணக்கான புத்தகங்கள்! அங்கு சென்றால் நாம் புத்தகத்தை பற்றியும் அவற்றின் மேன்மையையும் அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்நூலகத்திற்கு சென்று படிக்கின்றனர்அங்கு தான் நான் அமைதி என்ற சொல்லிற்கு அர்த்தம் உணர்ந்தேன்! அங்கு மின் விசிறியை அமைக்க தான் முதலில் முடுவெடுத்தார்கள்ஆனால் அச்சத்தம் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்காது என்பதால் முற்றிலும் குளிரூட்டப்பட்டதுஅங்கு நான் இரண்டாம் தளத்தில் உள்ள தமிழ் பிரிவிற்கு சென்றேன்அங்கு உள்ள புத்தகங்கள் அனைத்தும் என் மனதை கவர்ந்தனஅதில் என் மனதை மிகவும் கவர்ந்து நான் படித்தது,

1.             தமிழகப் பாறை ஓவியங்கள் - டாக்டர்இராசு பவுன்துரை.

அடுத்து நான் நீண்ட நாளாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட,

2.             திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்.

தமிழகப் பாறை ஓவியங்கள்:

வாழ்விடங்களில் காணப்படும் தொன்மையான பண்பாட்டு தடயங்களில் பாறை ஓவியங்களும் ஒன்றாகும்தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டிற்கு பின்னரே பாறைஓவியங்கள் கண்டுபிடிக்க பெற்றுள்ளனஇது வரை சுமார் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்கள் காணப் பெற்றுள்ளனஅதிகமான ஓவியங்கள் தென்னார்க்காடுவட ஆர்க்காடுதர்மபுரிநீலகிரி மலைத் தொடர்மேற்கு மலைத் தொடர் கீழ் அமைந்துள்ள மாவட்டங்கள் தேனீமதுரை அருகே உள்ள குன்றுகள் ஆகிய இடங்களில் காணப் படுகின்றனஆனால் தமிழகத்தின் வரலாற்று சான்றுகளுடன் காணப்படும் மிகத் தொன்மையான ஓவியங்கள் விழுப்புரம் அருகிலுள்ள பனைமலைஆர்மா மலைபுதுக்கோட்டை அருகேயுள்ள சித்தன்ன வாசல் (படம்-1) மதுரையை சுற்றியுள்ள சமணக் குடைவரைகளாகிய திருமலைபுரம்கீழவளவுஆணைமலைஅரிட்டாபட்டிகீழக்குயில் குடி குன்றுகளிலும் வரலாற்று கால பாறை ஓவியங்கள் உள்ளன.

பாறை ஓவியங்களில் சில வரலாற்று காலத்தினைச் சார்ந்தவை ஆகும்இருப்பினும் அவை வரலாற்றுக்கு முந்தைய காலத்து பாறை ஓவியங்களின் கூறுகளாக திகழ்கின்றனஎனவே ஓவியபாணியின் தன்மை கருதி அவற்றையும் இணைந்தே இங்கு ஆய்வு செய்யப் படுகின்றன.

பாறை ஓவியங்களின் வடிவமைப்பினை கொண்டு நான்கு பண்பாட்டு நிலைகளாகக் காணலாம்அவையாவன:

வன விலங்ககளுடன் விலங்குகளை போல் வாழ்ந்த காட்டு மிராண்டி நிலை கொண்ட தொல் பழங்கால மனிதனின் படைப்புகள்.

விலங்கினங்கள்வேட்டைக்காட்சிகளே அதிகமாக உள்ள பாறை ஓவியங்கள்.

மனிதனின் போர் காட்சிகளைக் கொண்ட படைப்புகள்இதில் மனிதனுக்கு முக்கிய பங்கு உண்டு.

முன்னோர் வழிபாடு அல்லது சடங்கு.

முதல் நிலை ஓவியங்கள்:

இதில் மனிதன் விலங்குகள் போல் திரிவதையே முற்காலத்தில் வரைந்து வைத்தனர்அடர்த்தியான வண்ணப் பூச்சி முறையில் வரைந்த ஓவியங்கள் தான் மிகுதியாக உள்ளனஆனால் இப் பிரிவில் இடம் பெற்ற ஓவியங்கள் போன்று தமிழகத்தில் இது வரை கண்டு பிடிக்கப் படவில்லை.

இரண்டாம் நிலை ஓவியங்கள்:

இந்திய துணை கண்டத்தில் இரண்டாம் நிலை ஓவியங்களே அதிகம் இடம் பெற்றுள்ளனஇதில் இந்தியாவில் காணப்படும் காண்டா மிருகம்சிங்கம்புலி போன்ற விலங்குகள் சிறிய அளவிலும் வேட்டை விலங்குகளான ஆடுமாடுபன்றி போன்றவை அதிக அளவிலும் காட்சி படுத்தபட்டுள்ளதுஇதில் பெரும்பாலும் வெள்ளைகருப்பு போன்ற நிறங்கள் அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளதுஇவை பொதுவாக புதுக்கற்காலத்திற்குரிய பண்பாட்டு கூறுகளை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.

மூன்றாம் நிலை ஓவியங்கள்:

மூன்றாம் நிலை ஓவியங்களில் மனித வடிவங்கள் அதிகம் இடம் பெறும்விலங்கினங்கள் பொதுவாக வேட்டை காட்சி என்னும் நிலையில் அமைந்திருக்கும்இனக்குழு தொடர்புடைய மனித வடிவங்களும் அவர்களுடைய சடங்கு நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப் பட்டிருக்கும்போர் காட்சிகள் இந்நிலையில் சிறப்பாக இடம்பெறும்.

மூன்றாம் நிலையில் செந்நிறம், வெள்ளைகறுப்பு ஆகியநிறங்கள் இடம்பெறும்இவ்வகை ஓவியங்கள் பெருங்கற்கால ஓவியங்கள் எனக் குறிக்கப்படுகின்றனஇவைசுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கூறலாம்.

பாறை ஓவியங்களை தீட்ட இயற்கையில் கிடைக்ககூடிய பொருள்களை கொண்டே வண்ணங்களை ஆக்கினர்இத்தகைய ஓவியங்களை சர்ஹத்திலும்சூரியாகுன்றிலும்மகாதேவகுன்று பகுதிகளில் கண்டு பிடிக்கபெற்ற பச்மாரிஹோசங்கா பாத்திலும் காணலாம்.

பாறை ஓவியங்களில் சில மிகுந்த அழகுணர்ச்சியை கொண்டவைவேட்டையின் போது இரு விலங்குகளை சுற்றிவளைத்து வயப்படுத்தும்காட்சியை மாண்டி ரோசாவிலும்குழல் ஊதுகின்ற குரங்கின் வடிவத்தை டோரதி தீப்சரிவில் உள்ள குகை ஓவியத்திலும் காணலாம்.

தென்னிந்தியாவில் தமிழகம்ஆந்திரம்கர்நாடகம்கேரளம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

காட்டெருதுகளின் சண்டையானைபறவைகள்திமிலும் கொம்பு முள்ள எருதுகள் ஆகிய ஓவியங்கள் பல்லாரி மாவட்டத்தில் உள்ள குப்கல்லு என்னும் இடத்தில் உள்ளன.

கேரளத்தில் வைய நாட்டில் உள்ள எடக்கல் என்னும் இடத்தில் மனித வடிவங்களும் விலங்கின வடிவங்களும் உள்ளன.

திராவிட மொழியின் ஒப்பிலக்கணம்:

கால்டுவெல் அவர்கள் திராவிட மொழியின் ஒப்பிலக்கணம் என்னும் இந்நூலில் தமிழின் பெருமையையும் தாய்மையையும் தொன்மையையும் நன்கு விளக்குகிறார்இவர் இந்நூலின் முகப்புரையில் “நான் தமிழ் கற்க ஆரம்பித்து 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

ஆனால் இன்னும் என்னால் தமிழை முழுவதும் கற்றுகொள்ள முடியவில்லை ஏனென்றால் அதன் கிளை மொழிகளான தெலுங்குமலையாளம்கன்னடம் ஆகிய மொழிகளை நான் சரிவர கற்று கொள்ளாததே.”

இந்நூலில் கால்டுவெல் திராவிடன் என்ற பொதுச்சொல் ஆட்சிதிராவிட மொழி வரிசைதிராவிட மொழிகள் திசை மொழிகள் அல்லதனித்துவமான தமிழ்-சமஸ்கிருத மொழிகள்வட இந்திய மொழிகள் திராவிட மொழிகள் மூலம்திராவிட மொழிகள் எக்குடும்பத்தைச் சேர்ந்தனதிராவிட மொழிகளில் தொன்மை மொழி எது?, தென்னக மொழிகளின் இலக்கிய நடையும் – தொன்மை நிலையும்செந்தமிழ் இலக்கியத்தின் தொன்மைதிராவிட எழுத்துருவ நினைவு சின்னங்கள்திராவிடர் ஆரியர் வட இந்திய பழங்குடி அரசியல் சமூக தொடர்புகள், 'சூத்ர’ என்ற சொல்லின் வழக்குஆரிய திராவிட தொன்மை நாகரிகம்திராவிட நாகரிகம் ஆரிய நாகரிகம் கலந்த காலம்ஒலிமெய்யெழுத்துக்கள்தலைவளி எழுத்தின் பிறப்பிடம் என்று இவை அனைத்திலும் தமிழ் மொழியை வைத்து இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

சமஸ்கிருதக்கலப்பற்ற சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட திராவிட தனித் தன்மைவாய்ந்த மிகப்பழைய எழுத்துருவ நினைவு சின்னங்கள் என மதிக்கத்தக்க ஏராளமான திராவிட சொற்கள் கிரேக்க நிலநூல் ஆய்வாளர்களாகிய தாலமி (கிபி. 130), பெரிப்ளுஸ் (கிபி. 80), ஆகியோருடைய குறிப்புகளிலும்பிளைனி (கிபி. 77) அவர்களின் ”இயற்கை வரலாற்று நூல்” ஆகிய வெளி நாட்டார்களின் குறிப்புகளிலும் நூல்களிலும் பல திராவிட சொற்களைக் காணலாம்.

இவர் இந்நூலில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ் தான் என்றும் உலகில் உள்ள பழைமையான மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு நம் மொழியும் பண்பாடும் மிகுந்த தொன்மை மிக்கவைஇவை அனைத்தையும் அறியாமலேயே வெறும் தமிழ் தானே என்று கேவலமாக பேசுவோர் இந்த தமிழைப் பற்றி அறிந்து பின்தங்கள் வாயைத் திறக்க வேண்டும்.

அன்று தமிழ் உணர்ச்சியில்லாதோரை காண்பது அரிதுவெளிநாட்டாரையும் தமிழ் மயக்கி தன் வயப்படுத்தியதுஆனால் இன்றோ தமிழ் உணர்ச்சி உள்ளோரை காண்பது அரிதுதன் வாயுள்ளேயே அமிழ்தம் இருந்தால் அதன் சுவை தெரியாது அந்த நிலை தான் இப்போது தமிழுக்கும்இந்நிலை மாற வேண்டும்அதற்கென்று நான் எல்லோரையும் கம்பராகவோஇளங்கோவடிகளாகவோபாரதியாராகவோ வாழ சொல்லவில்லைஇவர்களின் தமிழ் உணர்வில் ஒரு அணு அளவிற்கு நமக்கு இருந்தால் போதும்.

உங்களுக்கு இக்கட்டுரை பிடித்தமானதாகவும்பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க தமிழுடன்வளர்க தமிழுடன்!!



நன்றிவணக்கம்.

No comments:

Post a Comment